Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ க்ரைம் கார்னர்//

க்ரைம் கார்னர்//

க்ரைம் கார்னர்//

க்ரைம் கார்னர்//

ADDED : அக் 24, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
ஸ்கூட்டர் திருடிய சிறுவன் கைது

சென்னை: பெரம்பூர், பேரக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் முனவ்வர், 31. புரசைவாக்கம், தாண்டவராயன் தெருவில் உள்ள மசூதிக்கு வெளியே, கடந்த 21ம் தேதி நிறுத்தப்பட்டிருந்த இவரது 'யமஹா ரே' ஸ்கூட்டர் திருட்டு போனது. விசாரித்த வேப்பேரி போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஓட்டேரியைச் சேர்ந்த நந்தகுமார், 19 மற்றும் 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர். சிறுவன் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது.

மின்சாரம் பாய்ந்து வாலிபர் படுகாயம்

கொளத்துார்: கொளத்துார், முருகன் நகர் 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் பிரியன், 23; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, கடந்த ஜனவரி மாதம் அபிநயா என்பவருடன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, வீட்டின் மாடியில் காய வைக்கப்பட்டிருந்த துணி, வீட்டின் அருகே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் விழுந்துள்ளது.

அதை எடுக்க பிரியன் முற்படும்போது, மின்சாரம் பாய்ந்து, தரைதளத்திற்கு துாக்கி வீசப்பட்டார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, 60 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

காற்றாடி விட்ட 5 பேருக்கு 'காப்பு'

புதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை, ராமானுஜம் நகரில், வீட்டின் மொட்டை மாடியில், தடையை மீறி மாஞ்சா நுால் பயன்படுத்தி காற்றாடி பறக்க விட்ட தண்டையார்பேட்டை அன்பழகன், 23, குமரவேல், 31, புது வண்ணாரப்பேட்டை சலீம், 41, ஆகிய மூவரையும், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். அதேபோல், அம்மன் தோட்டம் பகுதியில் காற்றாடி பறக்க விட்ட, வெற்றிவேல், 23, சதீஷ், 23, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மொபைல் போன் திருடனுக்கு தர்மஅடி

முத்தியால்பேட்டை: முத்தியால்பேட்டை, தையப்பன் தெருவில் வீடு கட்டுமான பணி நடக்கிறது. அங்கு வேலை பார்க்கும் தொழிலாளி ஒருவர், நேற்று காலை மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டிருந்தார். அந்த போனை திருடி தப்ப முயன்ற வாலிபரை, தொழிலாளர்கள் பிடித்து, தர்ம அடி கொடுத்து, முத்தியால்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சனாவுல்லா, 20, என்பதும், அவர் மீது மூன்று திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போன் பறித்த சிறுவன் உட்பட இருவர் கைது

கே.கே.நகர்: கே.கே.நகர், சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுபனேஷ், 38; கார் ஓட்டுநர். இவர், 20ம் தேதி இரவு கே.கே.,நகர் பொப்பிலிராஜன் தெருவில் மொபைல் போனில் பேசிய படி நடந்து சென்றார்.

அப்போது, பைக்கில் வந்த இருவர் மொபைல் போனை பறித்து சென்றனர். விசாரித்த கே.கே., நகர் போலீசார், போன் பறிப்பில் ஈடுபட்ட கோடம்பாக்கம் அக்பர் தெருவைச் சேர்ந்த சுரேந்தர், 26 மற்றும் 16 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர். இவர்கள் அதே தினம் கோடம்பாக்கத்திலும் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ரயிலில் கஞ்சா கடத்தியோர் ச ிக்க ின ர்

அண்ணா நகர்: பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த இரு பயணியரை, நேற்று முன்தினம் இரவு மதுவிலக்கு போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து 3.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், பெங்களூரைச் சேர்ந்த கிரண்குமார், 26, நபி ரசூல், 25, என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்தவர் கைது

அயனாவரம்: வழிப்பறி வழக்கில், அயனாவரம் போலீசாரால் கைது செய்யப்பட்ட மணிகண்டன், 27 என்பவர், ஜாமினில் வெளிவந்த பின், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். கடந்த பிப்., 3ம் தேதி, ஏழாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், மணிகண்டனை கைது செய்ய பிடியாணையை பிறப்பித்தது. எட்டு மாதமாக போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்த மணிகண்டனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us