பசுமை பூங்காவில் இறந்து மிதந்த மீன்
பசுமை பூங்காவில் இறந்து மிதந்த மீன்
பசுமை பூங்காவில் இறந்து மிதந்த மீன்
ADDED : மே 12, 2025 01:42 AM

போரூர்:வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு, போரூர் செட்டியார் அகரம் சாலையில், தனியார் மருத்துவமனை வளாகத்தில், அரசுக்கு சொந்தமான 16.60 ஏக்கர் திறந்தவெளி நிலம் இருந்தது.
இந்த நிலத்தை, மருத்துவமனையிடம் இருந்து மீட்ட நிலையில், 15.75 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், ஏரியுடன் ஈரநில பசுமை பூங்கா சமீபத்தில் திறக்கப்பட்டது.
பசுமை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஏரியில், மீன் அதிகளவில் நேற்று செத்து மிதந்தது.ஏரி நீரின் மாதிரியை சேகரித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.