/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தினமலர் செய்தி எதிரொலி ராயப்பேட்டையில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு தினமலர் செய்தி எதிரொலி ராயப்பேட்டையில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு
தினமலர் செய்தி எதிரொலி ராயப்பேட்டையில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு
தினமலர் செய்தி எதிரொலி ராயப்பேட்டையில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு
தினமலர் செய்தி எதிரொலி ராயப்பேட்டையில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு
ADDED : செப் 24, 2025 12:43 AM
சென்னை: ராயப்பேட்டையில் கழிவுநீர் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி ராயப்பேட்டை கிருஷ்ணாபுரம் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில், 10 மாதங்களாக அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் தொட்டிகள் நிரம்பி, துார்நாற்றம் வீசியது.
இது குறித்து புகார் அளித்தும், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து, வாரிய அதிகாரிகள் கழிவுநீர் தேக்கத்திற்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு ஏற்படுத்தினர். அதேநேரம், மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி நடைபெறுவதால், அப்பகுதியல் அடிக்கடி பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு ஏற்ப, கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.