Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாஸ்போர்ட் அதிகாரியை சந்திக்க கூடுதல் நேரம்

பாஸ்போர்ட் அதிகாரியை சந்திக்க கூடுதல் நேரம்

பாஸ்போர்ட் அதிகாரியை சந்திக்க கூடுதல் நேரம்

பாஸ்போர்ட் அதிகாரியை சந்திக்க கூடுதல் நேரம்

ADDED : அக் 11, 2025 12:01 AM


Google News
சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியை, பயனாளர்கள், செவ்வாய் தோறும் சந்திக்க, கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக விஜயகுமார் பொறுப்பேற்றபின், பயனாளர்கள், பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள் மற்றும் வசதிகள் குறித்து நேரில் தெரிவிக்க, ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை நேரம் ஒதுக்கினார்.

அதனால், வெளிப்படையான சேவை கிடைத்தது. இது, பயனாளர்களிடம் வரவேற்பை பெற்றாலும், அதிகமானோர் பங்கேற்க முடியவில்லை என்ற புகார் எழுந்தது.

இந்நிலையில், வரும் 14ம் தேதி முதல் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க அவர் முன்வந்துள்ளார்.

அவரை சந்தித்து உரையாட விரும்புவோர், 'rpo.chennai@gov.in' என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044 -- 2851 8848 என்ற தொலைபேசி எண்ணிலோ முன்பதிவு செய்ய வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us