/உள்ளூர் செய்திகள்/சென்னை/'கள ஆய்வால் வரலாற்று புனைவு எழுதும் படைப்பாளர்கள் குறைந்து விட்டனர்' 'புதுப்பித்து கொள்பவரே வாழ தகுதியானவர்' பபாசி செயலர் முருகன் பேட்டி'கள ஆய்வால் வரலாற்று புனைவு எழுதும் படைப்பாளர்கள் குறைந்து விட்டனர்' 'புதுப்பித்து கொள்பவரே வாழ தகுதியானவர்' பபாசி செயலர் முருகன் பேட்டி
'கள ஆய்வால் வரலாற்று புனைவு எழுதும் படைப்பாளர்கள் குறைந்து விட்டனர்' 'புதுப்பித்து கொள்பவரே வாழ தகுதியானவர்' பபாசி செயலர் முருகன் பேட்டி
'கள ஆய்வால் வரலாற்று புனைவு எழுதும் படைப்பாளர்கள் குறைந்து விட்டனர்' 'புதுப்பித்து கொள்பவரே வாழ தகுதியானவர்' பபாசி செயலர் முருகன் பேட்டி
'கள ஆய்வால் வரலாற்று புனைவு எழுதும் படைப்பாளர்கள் குறைந்து விட்டனர்' 'புதுப்பித்து கொள்பவரே வாழ தகுதியானவர்' பபாசி செயலர் முருகன் பேட்டி

புத்தகக்காட்சிக்கு வரும் புதிய தலைப்பிலான புத்தகங்கள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதே?
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., வரி உயர்வு, கொரோனா உள்ளிட்ட தொடர் தாக்குதல்களால் பதிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
புதிய வாசகர்களின் வரவும் குறைந்துள்ளதாமே?
முன்பெல்லாம், பல ஊர்களில் இருந்து சென்னை புத்தகக்காட்சிக்கு வாசகர்கள் வருவர். தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக்காட்சி நடத்தப்படுவதால், தீவிர வாசகர்கள் அங்கேயே புத்தகங்களை வாங்கி விடுகின்றனர்.
நீங்கள் பபாசியின் செயலராக மூன்றாவது முறையாக தொடர்கிறீர்கள், புதிய உறுப்பினர் சேர்ப்பதில் என்ன பிரச்னை?
புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொண்டு தான் உள்ளோம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. அதேநேரம், தற்போதைய புத்தகக்காட்சியில், 950 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவே அதிகம்தான்.
வாசகர்கள் - படைப்பாளர்கள் மாறியிருக்கிறார்களா?
ஆமாம். தற்போது முற்போக்கு, சூழலியல், குழந்தைகளுக்கான படைப்புகள் அதிகம் வெளிவருகின்றன. அவற்றை வாசகர்களும் விரும்பி வாங்குகின்றனர்.
அரசின் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?
நீங்களே பாருங்கள், சாலைகளில் போலீசார் வாகனங்களை வழிநடத்துகின்றனர். உள்ளே ஆம்புலன்ஸ் உள்ளது. கட்சி சார்பின்றி முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தொடர்ந்து பங்கேற்கின்றனர்.
உங்களுக்கான நிரந்தர புத்தகக்காட்சிக்கான இடம் கிடைத்து விட்டதா?
அரசுக்கு நாங்கள் நான்கு இடங்களை காட்டியுள்ளோம். அவற்றில் ஏதேனும் ஒரு இடத்தில் மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கினால், அது சாத்தியம். அந்த அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம்.


