ADDED : பிப் 11, 2024 12:21 AM
வேளச்சேரி, வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் நளினி, 59; பூ வியாபாரி. நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி விரைவு சாலையை நடந்து கடக்க முயன்றார்.
அப்போது, வேளச்சேரியில் இருந்து கிண்டி நோக்கி சென்ற பஜாஜ் பல்சர் பைக் மோதி, நளினி சம்பவ இடத்திலே பலியானார். பைக் ஓட்டி வந்த நவீன்குமார், 30, கீழே விழுந்து லேசான காயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.