/உள்ளூர் செய்திகள்/சென்னை/தறிகெட்டு ஓடிய கார் மோதி பெண் உட்பட மூவர் காயம்தறிகெட்டு ஓடிய கார் மோதி பெண் உட்பட மூவர் காயம்
தறிகெட்டு ஓடிய கார் மோதி பெண் உட்பட மூவர் காயம்
தறிகெட்டு ஓடிய கார் மோதி பெண் உட்பட மூவர் காயம்
தறிகெட்டு ஓடிய கார் மோதி பெண் உட்பட மூவர் காயம்
ADDED : மார் 21, 2025 12:30 AM

அண்ணா நகர்,கொளத்துாரைச் சேர்ந்த செந்தில், 49, தன் 'சுசூகி ஸ்விப்ட்' காரில், குடும்பத்துடன், சூளைமேட்டில் உள்ள தங்கை வீட்டில் இருந்து, நேற்று முன்தினம் புறப்பட்டார்.
அபித் நகர் குறுகிய சாலை என்பதால், சாலையோரத்தில் காரை நிறுத்தி, மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டார்.
பின், காரை எடுக்கும்போது, ஆக்சிலேட்டரை வேகமாக இயக்கியதால், கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.
அப்போது, அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த பெண்ணை இடித்து தள்ளி, மெக்கானிக் கடையின் முன், வாகனங்களில் மோதி நின்றது.
சாலையோரத்தில் அமர்ந்திருந்த அடையாளம் தெரியாத மூதாட்டி மீதும் கார் மோதி, இடுப்பில் லேசான காயமடைந்தார்.
மெக்கானிக் கடை ஊழியர் சுனில்குமார், 53, காயம் காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஸ்கூட்டரில் வந்த பெண் லேசான காயங்களுடன் தப்பினார்.
அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.