Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'குளோபல் லாஜிக்' நிறுவனம் புதிய அலுவலகம் திறப்பு விழா

'குளோபல் லாஜிக்' நிறுவனம் புதிய அலுவலகம் திறப்பு விழா

'குளோபல் லாஜிக்' நிறுவனம் புதிய அலுவலகம் திறப்பு விழா

'குளோபல் லாஜிக்' நிறுவனம் புதிய அலுவலகம் திறப்பு விழா

ADDED : அக் 10, 2025 07:59 AM


Google News
Latest Tamil News
பெருங்குடி;சென்னை, ஹிட்டாச்சி நிறுவன குழுமத்தின், டிஜிட்டல் பொறியியலின் முன்னணி நிறுவனமான 'குளோபல் லாஜிக்'கின் புதிய அலுவலகத்தை, பெருங்குடி ஆர்.எம்.இசட்., தொழில்நுட்ப பூங்காவில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

நிறுவன துணைத் தலைவரும் இயக்குநருமான பியூஷ் ஜா கூறியதாவது:

எங்கள் நிறுவனத்தின் சென்னை கிளையில், 800 பணியாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள், 1,000க்கும் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தவே, இப்புதிய அலுவலகம் கூடுதல் வசதியுடன் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை முன்னணி தொழில் துறையினரின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களுக்கு தாயகமாக உள்ளதோடு, தகவல் தொழில்நுட்பத்தில் திறமையானவர்களை கொண்டுள்ளதால், எங்கள் நிறுவனத்தை இங்கு விரிவுபடுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us