/உள்ளூர் செய்திகள்/சென்னை/லாரி மீது அரசு பஸ் மோதல் ஒரகடம் அருகே 6 பேர் காயம்லாரி மீது அரசு பஸ் மோதல் ஒரகடம் அருகே 6 பேர் காயம்
லாரி மீது அரசு பஸ் மோதல் ஒரகடம் அருகே 6 பேர் காயம்
லாரி மீது அரசு பஸ் மோதல் ஒரகடம் அருகே 6 பேர் காயம்
லாரி மீது அரசு பஸ் மோதல் ஒரகடம் அருகே 6 பேர் காயம்
ADDED : பிப் 02, 2024 07:30 AM

:
ஒரகடம்: வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், தாம்பரத்தில் இருந்து தடம் எண்: 55எஸ் என்ற அரசு பேருந்து, நேற்று மாலை மேட்டுப்பாளையம் சென்றது. பேருந்தில் எட்டு பேர் பயணித்தனர். ஓட்டுனர் தனசேகரன், 55 என்பவர் பேருந்தை ஓட்டினார்.
ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை அருகே வந்த போது, அங்கு சாலையோரமாக நின்றிருந்த லாரியின் மீது பேருந்து மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த, பண்ருட்டி கண்டிகையை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களை ஒரகடம் போலீசார் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தனசேகர் 42, என்பவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று, போலீசார் விசாரிக்கின்றனர்.


