/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டிராக்டர் மீது மோதி அரசு பேருந்து விபத்து டிராக்டர் மீது மோதி அரசு பேருந்து விபத்து
டிராக்டர் மீது மோதி அரசு பேருந்து விபத்து
டிராக்டர் மீது மோதி அரசு பேருந்து விபத்து
டிராக்டர் மீது மோதி அரசு பேருந்து விபத்து
ADDED : செப் 24, 2025 12:39 AM
குன்றத்துார் : வண்டலுார் - --மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், தாம்பரத்தில் இருந்து ஆவடி நோக்கி அரசு பேருந்து நேற்று சென்றது. இந்த பேருந்து, குன்றத்துார் அருகே கடந்தபோது, சாலையில் பழுதாகி நின்றிருந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. ஓட்டுநர், பயணியர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.