ADDED : செப் 25, 2025 12:41 AM

மாதவரம்: புத்தகரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் தவசிலிங்க பெருமாள், 48.
கடைக்கான பொருட்கள் வாங்க, நேற்று காலை தன் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மஞ்சம்பாக்கம் சந்திப்பில் லாரி ஒன்று திடீரென திரும்பும்போது, இவரது ஸ்கூட்டரில் மோதியது. இதில் கீழே விழுந்த தவசிலிங்க பெருமாள் மீது, லாரி டயர் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.