/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூன்று ஆண்டுகளாக குறைந்து வரும் நிலத்தடி நீர் மூன்று ஆண்டுகளாக குறைந்து வரும் நிலத்தடி நீர்
மூன்று ஆண்டுகளாக குறைந்து வரும் நிலத்தடி நீர்
மூன்று ஆண்டுகளாக குறைந்து வரும் நிலத்தடி நீர்
மூன்று ஆண்டுகளாக குறைந்து வரும் நிலத்தடி நீர்

அரசு ஈடுபட வேண்டும்
சென்னையில் வடிகால், கால்வாய் கட்டமைப்புகள் அதிகரித்ததால், மண் தரை காண்பதே அரிதாகி விட்டது. இதனால், மழைநீர் நிலத்திற்கடியில் இறங்குவது தடைபட்டு, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு செல்கிறது. தனி வீடாக இருந்தால், வீட்டைச் சுற்றி மரங்கள் நட்டு, மண் பரப்பாக பராமரிப்பது அவசியம். மரம் நடும் ஆர்வத்தை போல், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க செய்யும் திட்டங்களில் அரசு ஈடுபட வேண்டும்; மக்களுக்கு உரிய வகையில் பங்களித்தால், பல்வேறு வகைகளில் பயன் அளிக்கும்.
விழிப்புணர்வு இல்லை
பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால், நீரில் உப்பு தன்மை அதிகரித்து உள்ளது. சென்னையில் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் வடிகால், கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. எதிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கவில்லை. குளம், ஏரி, வடிகால், கால்வாய்க்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்க வேண்டும். குறுக்கு தெருக்களின் மைய பகுதியில் உறை கிணறு அமைக்கலாம். நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க புதிய கண்டுபிடிப்புகள் அவசியம்.