Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மனைவியை கொன்று 'டிரம்'மில் அடைத்து 3 கி.மீ., எடுத்து சென்று புதைத்த கணவர் 2 மாதத்திற்கு பின் சிக்கினார்

மனைவியை கொன்று 'டிரம்'மில் அடைத்து 3 கி.மீ., எடுத்து சென்று புதைத்த கணவர் 2 மாதத்திற்கு பின் சிக்கினார்

மனைவியை கொன்று 'டிரம்'மில் அடைத்து 3 கி.மீ., எடுத்து சென்று புதைத்த கணவர் 2 மாதத்திற்கு பின் சிக்கினார்

மனைவியை கொன்று 'டிரம்'மில் அடைத்து 3 கி.மீ., எடுத்து சென்று புதைத்த கணவர் 2 மாதத்திற்கு பின் சிக்கினார்

ADDED : அக் 21, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்: மனைவியை கொன்று, 'டிரம்'மில் அடைத்து 3 கி.மீ., பைக்கில் எடுத்து சென்று புதைத்த கணவர், இரண்டு மாதங்களுக்கு பின் போலீசாரிடம் சிக்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 39; பெயின்டர். இவரது மனைவி பிரியா, 26. இவர்களுக்கு ஆறு மற்றும் ஏழு வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சிலம்பரசன், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், மனமுடைந்த பிரியா, ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதும், பின் சமாதானப்படுத்தி சிலம்பரசன் அழைத்து வருவதுமாக இருந்துள்ளது.

கடந்த இரு மாதங்களாக, பிரியாவை குறித்த எந்த தகவலும் இல்லாததால், நேற்று முன்தினம் பிரியாவின் குடும்பத்தினர், மகளை பார்க்க துராபள்ளம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது, இரண்டு மாதங்களுக்கு முன், வேறு ஒருவருடன் பிரியா ஓடிவிட்டதாக, சிலம்பரசன் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களாக அம்மாவை காணவில்லை என, குழந்தைகளும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரியாவின் பெற்றோர், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

போலீசாரின் விசாரணையில், பிரியாவை சிலம்பரசன் கொலை செய்து புதைத்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

தொடர் விசாரணையில், பிரியாவின் நடத்தையில் சந்தேகமடைந்த சிலம்பரசன், கடந்த ஆக., 14ம் தேதி ஏற்பட்ட தகராறின்போது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அன்று இரவு, பிரியாவின் உடலை பிளாஸ்டிக் 'டிரம்'மில் வைத்து, பைக்கில் எளாவூர் ஏழு கண் பாலம் நோக்கி 3 கி.மீ., சென்றுள்ளார்.

அங்குள்ள சுடுகாடு அருகே பள்ளம் தோண்டி, பிரியாவின் உடலை புதைத்து, பேரலை பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது.

நேற்று மாலை, கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்பாபு முன்னிலையில், அழுகிய நிலையில் பிரியாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

அதே இடத்தில், திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், சிலம்பரசனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us