ADDED : மார் 17, 2025 11:52 PM
ஐ.பி.எல்., டிக்கெட் நாளை விற்பனை
சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், வரும் 23ம் தேதி நடக்க உள்ள ஐ.பி.எல்., போட்டியில், 'சென்னை சூப்பர் கிங்க்ஸ்' அணியும், 'மும்பை இண்டியன்ஸ்' அணியும் மோத உள்ளன. இதற்கான டிக்கெட்டுகள், நாளை காலை 10:15 மணிக்கு, www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் விற்பனை துவங்க உள்ளது. டிக்கெட்டுகள் 1,700 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.