Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காசிமேடு மீனவர்கள் வலையில் அதிகம் சிக்கிய கானாங்கத்தை

காசிமேடு மீனவர்கள் வலையில் அதிகம் சிக்கிய கானாங்கத்தை

காசிமேடு மீனவர்கள் வலையில் அதிகம் சிக்கிய கானாங்கத்தை

காசிமேடு மீனவர்கள் வலையில் அதிகம் சிக்கிய கானாங்கத்தை

ADDED : அக் 13, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
காசிமேடு: காசிமேடு மீனவர்கள் வலையில், அதிகளவில் கானாங்கத்தை, வாளை உள்ளிட்ட சிறியரக மீன்கள் சிக்கின.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், வழக்கம்போல நேற்று அதிகாலை முதலே மீன் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் திரளானோர் வந்திருந்தனர். இதனால் காசிமேடு, திருவிழா போன்று களைகட்டியது.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 20க்கும் குறைவான விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில், நேற்று 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. குறிப்பாக மீனவர்கள் வலையில் கானாங்கத்தை, வாளை, முளியான் உள்ளிட்ட சிறிய ரக மீன் வகைகளே அதிகளவில் சிக்கின.

இதனால், கடந்த வாரம் கானாங்கத்தை சிறிய மீன்களே கிலோ 300 ரூபாய் விற்கப்பட்ட நிலையில், நேற்று பெரிய மீன்கள் கிலோ 200 முதல் 250 வரையிலும், சிறிய மீன்கள் 80 முதல் 100 ரூபாய் வரையிலும் விற்பனையாகின. அதேநேரம், மற்ற மீன்களின் விலை, கடந்த வாரத்தை போலவே உயர்ந்திருந்தது. பொதுமக்கள் பேரம் பேசி வாங்கி சென்றனர்.

மீன் விலை நிலவரம் வகை கிலோ (ரூ.) வஞ்சிரம் 1,000 - 1,200 கறுப்பு வவ்வால் 900 - 1,000 வெள்ளை வவ்வால் 1,200 - 1,300 ஐ வவ்வால் 1,400 - 1,500 பாறை 450 - 500 கடல் விரால் 500 - 600 சங்கரா 300 - 350 சீலா 500 - 550 தும்பிலி 150 - 200 கடம்பா 300 - 350 நெத்திலி 250 - 300 முளியான் 150 - 200 வாளை 80 - 100 இறால் 400 - 500 டைகர் இறால் 1,000 - 1,200 நண்டு 200 - 300 வரி நண்டு 500 - 600







      Our Apps Available On




      Dinamalar

      Follow us