/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 3வது மாடியிலிருந்து விழுந்த மெட்ரோ பணி ஊழியர் பலி 3வது மாடியிலிருந்து விழுந்த மெட்ரோ பணி ஊழியர் பலி
3வது மாடியிலிருந்து விழுந்த மெட்ரோ பணி ஊழியர் பலி
3வது மாடியிலிருந்து விழுந்த மெட்ரோ பணி ஊழியர் பலி
3வது மாடியிலிருந்து விழுந்த மெட்ரோ பணி ஊழியர் பலி
ADDED : செப் 13, 2025 12:46 AM
சென்னை சூளைமேட்டில், மது போதையில், 3வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த மெட்ரோ ரயில்வே ஊழியர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், மருதன்குடியைச் சேர்ந்தவர் ஜெபடெல்டின், 23. இவர், சூளைமேடு அப்துல்லா தெருவில் வசித்து, சேத்துப்பட்டு பகுதியில் நடந்துவரும் மெட்ரோ ரயில்வே பணியில், சிக்னல் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மது அருந்திவிட்டு, மூன்றாவது தளத்தில் உறங்கச் சென்றார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில், அவசர உபாதை கழிப்பதற்காக எழுந்து கீழே இறங்க முற்பட்டபோது, கைப்பிடி சுவர் இல்லாததை அறியாமல், தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை, சக நண்பர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து, சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.