போலீசார் பஸ்சில் செல்ல நவீன பஸ் பாஸ்
போலீசார் பஸ்சில் செல்ல நவீன பஸ் பாஸ்
போலீசார் பஸ்சில் செல்ல நவீன பஸ் பாஸ்
ADDED : மார் 12, 2025 03:18 AM

சென்னை:
சென்னை காவல் துறையைச் சேர்ந்தவர்கள், மாநகர பேருந்துகளில் பயணிப்பதற்கான நவீன அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை, கமிஷனர் அருண் துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், 'காவலர் முதல் ஆய்வாளர் வரை, அடையாள அட்டைகளை காண்பித்து, மாநகர பேருந்துகளில் பயணம் செய்யலாம். அதற்கான நவீன அடையாள அட்டை வழங்கப்படும்' என, 2021 செப்., 13ல் சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, 2024 ஆக., 2ல், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து முதற்கட்டமாக, 11,021 போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு நவீன அடையாள அட்டை வழங்கும் பணி நேற்று துவங்கியது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 10 அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, மாநகர பேருந்துகளில் பயணிப்பதற்கான அடையாள அட்டைகளை, கமிஷனர் அருண் வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர், துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, மேகலீனா ஐடன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.