/உள்ளூர் செய்திகள்/சென்னை/'நிலவும் மலரும்' நுால் வெளியீட்டு விழா'நிலவும் மலரும்' நுால் வெளியீட்டு விழா
'நிலவும் மலரும்' நுால் வெளியீட்டு விழா
'நிலவும் மலரும்' நுால் வெளியீட்டு விழா
'நிலவும் மலரும்' நுால் வெளியீட்டு விழா
ADDED : பிப் 12, 2024 01:44 AM

மயிலாப்பூர்:'கலைமகள்' பப்ளிகேஷன்ஸ் மற்றும் தேஜஸ் பவுண்டேஷன் சார்பில் இந்திரநீலன் சுரேஷ் எழுதிய 'நிலவும் மலரும்' சிறுகதை தொகுப்பு புத்தகம் வெளியீட்டு விழா, நேற்று நடந்தது.
மயிலாப்பூர், கற்பகாம்பாள் நகரில் உள்ள கோகலே சாஸ்திரி அரங்கில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினர் முன்னாள் சி.பி.ஐ., அதிகாரி ஆர்.கே.ராகவன் புத்தகத்தை வெளியிட்டார்.
'கலைமகள்' ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், நாவலாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர்,கல்கி முன்னாள் ஆசிரியர்வி.எஸ்.வி.ரமணன், பி.டி.டி.ராஜன் ஆகியோர் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், சங்கர சுப்பிரமணியன் பேசியதாவது:
சிறுகதை என்பதில் முற்போக்கு, பிற்போக்கு என்பது கிடையாது. 100 ஆண்டு காலத்திற்கு முன் வந்த சிறுகதை ஆனாலும், இப்போது வரும் சிறுகதை ஆனாலும் ஒன்று தான்.
முதன் முதலில் மகாகவி பாரதி சிறுகதை எழுதினார் என சொல்லப்படுகிறது.
முதன் முதலில் ஓவியத்துடன், சிறுகதை எழுதியவர்கள் யார் என்ற சர்ச்சை இன்றும் உண்டு. இதை ஒருவர் என்னிடம் கேட்டார்.
அதற்கு புராணக் கதை எனக்கு கைகொடுத்தது. முதலில் ஓவியம் வரைந்தவர் பார்வதிதேவி, அதற்கு சிறுகதை எழுதியவர் சிவபெருமான்; அதில் இருந்து வந்தவர் தான் சித்திர குப்தர்.
'நிலவும் மலரும்' சிறுகதை இளையோர் முதியோர் என, அனைத்து தரப்பினருக்கான புத்தகம்.
இவ்வாறு அவர் பேசினார்.