/உள்ளூர் செய்திகள்/சென்னை/ எம்.ஆர்.எப்., ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் எம்.ஆர்.எப்., ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
எம்.ஆர்.எப்., ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
எம்.ஆர்.எப்., ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
எம்.ஆர்.எப்., ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
ADDED : செப் 14, 2025 02:57 AM
திருவொற்றியூர்:எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலை ஊழியர் கள், இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர், விம்கோ நகரில், எம்.ஆர்.எப்., டயர் உற்பத்தி தொழிற்சாலை செயல் படுகிறது. இங்கு, 61 பயிற்சியாளர்கள் உட்பட, 820 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
ஆண்டுதோறும், ஊழியர்களுக்கு காப்பீட்டு தொகைக்கான முன்பணத்தை, தொழிற்சாலை நிர்வாகமே வழங்கி, பின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதாக கூறப்படுகிறது.
இம்முறை, என்.ஏ. பி.எஸ்., எனும் தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தை ஏற்க வேண்டும் எனக் கூறி, அந்த பணத்தை, தொழிற்சாலை நிர்வாகம் தர மறுத்ததால், 10ம் தேதி இரவு முதல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.
வேலை நிறுத்தம் காரணமாக, ஊழியர் களுக்கான பேருந்து மற்றும் உணவு வசதியை நிர்வாகம் நிறுத்தியது.
இதை கண்டித்து, நேற்று முன்தினம் மாலை உள்ளிருப்பு போராட்டம் மற்றும் வாயிற்கதவு முன் கூடிய, 200க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.