Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'போத்தீஸ் ஸ்வர்ண மஹால்' பூந்தமல்லியில் புதிதாக திறப்பு

'போத்தீஸ் ஸ்வர்ண மஹால்' பூந்தமல்லியில் புதிதாக திறப்பு

'போத்தீஸ் ஸ்வர்ண மஹால்' பூந்தமல்லியில் புதிதாக திறப்பு

'போத்தீஸ் ஸ்வர்ண மஹால்' பூந்தமல்லியில் புதிதாக திறப்பு

ADDED : அக் 06, 2025 02:59 AM


Google News
Latest Tamil News
பூந்தமல்லி,: 'போத்தீஸ் ஸ்வர்ண மஹால்'லின் ஏழாவது கிளை, பூந்தமல்லியில் நேற்று திறக்கப்பட்டது.

'போத்தீஸ்' குழுமத்தின் அங்கமான போத்தீஸ் ஸ்வர் ணமஹால், கேரளா, தமிழகத்தில் திருச்சி, கோவை உட்பட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இக்கடைகளில், தென் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் கலை நயத்தையும், கைவினை திறனுடன் நவீனத்தையும் விரும்பும் நகை ஆர்வலர்களுக்கு, தன் பிரத்யேக தொகுப்புகளை வழங்குகிறது.

இந்நிலையில், இதன் ஏழாவது கிளை, சென்னை அடுத்த பூந்தமல்லியில் நேற்று திறக்கப்பட்டது. போத்தீஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ், கடையை திறந்து வைத்து கூறியதாவது:

குறுகிய காலத்தில், விரைவான வளர்ச்சியுடன் போத்தீஸ் ஸ்வர்ண மஹால், தன் புதிய கிளையை துவங்கியுள்ளது. ஒவ்வொரு சுப நிகழ்விற்கும், தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளை பிரத்யேகமாக விற்பனை செய்கிறோம்.

தங்கம் என்பது ஆபரணம் மட்டும் அல்ல அது பெரிய முதலீடு. இதை பெண்கள் சரியாக அறிந்து தங்கத்தை வாங்குகின்றனர்.

அதற்காக, திறப்பு விழா சலுகையாக சவரனுக்கு 2,000 ரூபாய் தள்ளுபடி தருகிறோம். மேலும், 'டிஜிகோல்ட்' என்ற டிஜிட்டல் தளத்தின் மூலம் குறைந்தபட்சம் 100 ரூபாய் வரை தங்கத்தில் சிறுக, சிறுக முதலீடு செய்து, எளிதாக தங்க நகைகளாக வாங்கலாம்.

வாடிக்கையாளர்கள், வழக்கம்போல், தங்களின் ஆதரவை இந்த போத்தீஸ் ஸ்வர்ண மஹாலுக்கும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us