Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

ADDED : அக் 09, 2025 02:32 AM


Google News
பார்வையற்றோருக்கு

நலத்திட்ட உதவி

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மீனம்பாக்கம் 'ஷி பவுண்டேஷன்' மற்றும் புதுச்சேரி ரோட்டரி கிளப் லெகசி இணைந்து, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தொழில் துவங்க வசதியாக, தேவையான உதவிப் பொருட்களை வழங்கின. உதவிகளை, ஷி பவுண்டேஷன் நிறுவனர் கணேஷ் ஆச்சார்யா வழங்கினார். நிகழ்வில், ஜனாதிபதி விருது பெற்ற சிறுமி ஜோதி உட்பட, பலர் பங்கேற்றனர்.

குட்கா விற்பனை

5 பேர் கைது

மாங்காடு: மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில், மவுலிவாக்கம் போலீசார், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது, குட்கா பொருட்களை விற்ற முகலிவாக்கத்தைச் சேர்ந்த சேகர், 54, கவிதா, 32, தண்டலத்தை சேர்ந்த குமார், 48, மைக்கேல் ராஜ், 43, மாரிமுத்து, 43, ஆகிய ஐவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 15 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

'பிரிஜ்'ஜில் மின்கசிவால்

தீ விபத்து

குன்றத்துார்: குன்றத்துாரை அடுத்த திருமுடிவாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 32. ஓட்டுநர். அவரது மனைவி சங்கீதா. நேற்று வீட்டு 'பிரிஜ்'ஜில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பொறி பரவி, அருகே இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தன.

தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. திருமுடிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

போதை பொருள்

பறிமுதல்: இருவர் கைது

பரங்கிமலை: ஆலந்துார் மின்வாரிய அலுவலம் பின்புறம் உள்ள காலி மனை பகுதியில், சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி வந்த இருவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர்.

அப்போது, அவர்களிடம் 3.2 கிராம் மெத் ஆம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரித்து, பழவேற்காடு நந்தபாலன், 30, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுடலைமுருகன், 23, இருவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us