/உள்ளூர் செய்திகள்/சென்னை/தாம்பரம் மாநகராட்சி தொடர்பான செய்தி...தாம்பரம் மாநகராட்சி தொடர்பான செய்தி...
தாம்பரம் மாநகராட்சி தொடர்பான செய்தி...
தாம்பரம் மாநகராட்சி தொடர்பான செய்தி...
தாம்பரம் மாநகராட்சி தொடர்பான செய்தி...
ADDED : பிப் 02, 2024 07:32 AM
'ஊராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சேர்ந்து, சாலை, மின் விளக்கு, கால்வாய் போன்ற பணிகளுக்கு, நிதி ஆதாரத்தை கொண்டு, தன்னிச்சையாக முடிவு எடுத்து, பணிகளை மேற்கொள்ள முடியும். அப்படி இருந்தாலும், புறநகரில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர், பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய் என்பது தற்போது முறையாக இல்லை.
மாநகராட்சியுடன், ஊராட்சிகள் இணைக்கப்பட்டால், மண்டல குழு கூட்டத்திலும், மாநகராட்சி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு பணிகளை மேற்கொள்ள முடியும். இருந்தாலும், மாநகராட்சியுடன் இணைப்பது தான் சிறந்தது. ஏனென்றால், அனைத்து திட்டங்களுக்கும் கூடுதல் நிதி கிடைக்கும். பாலாறு, மெட்ரோ குடிநீர் கிடைக்கும். பாதாள சாக்கடை பயன்பாட்டிற்கு வரும். மழைநீர் கால்வாய் முறையாக இருக்கும். ஒவ்வொரு பகுதியும் வளர்ச்சியடையும். சாலைகளும் மேம்படும்.
ப. தாமோதரன், 50,
தலைவர், குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு,
முடிச்சூர்.
''கவுல்பஜார், பொழிச்சலுார் ஊராட்சிகளில், போதிய நிதி இல்லாத காரணத்தால், மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. காரணம், வரி வசூல் போன்ற நிதி ஆதாரங்கள் குறைவு. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால், இவ்வூராட்சிகள் வளர்ச்சியடையும். குடியிருப்புகள் பெருகும். குடிநீர், சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய் போன்ற திட்டங்கள் முழுமையாக கிடைக்கும்.
கவுல்பஜார், பொழிச்சலுார் கிராம மக்கள்.


