/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிண்டியில் பட்டா வழங்க தடையின்மை சான்று கிண்டியில் பட்டா வழங்க தடையின்மை சான்று
கிண்டியில் பட்டா வழங்க தடையின்மை சான்று
கிண்டியில் பட்டா வழங்க தடையின்மை சான்று
கிண்டியில் பட்டா வழங்க தடையின்மை சான்று
ADDED : அக் 10, 2025 08:02 AM
சென்னை; கிண்டி தாலுகாவில், 45 பேருக்கு பட்டா வழங்க, மாநகராட்சி தடையின்மை சான்று வழங்கி உள்ளது.
கிண்டி தாலுகா, நகர புல எண்: 5706/4, பிளாக் எண்: 129ல், அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இதில், 65 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. இவர்கள், 40 ஆண்டுக்கு மேலாக வசிக்கின்றனர்.
இவர்களுக்கு, பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையடுத்து, இடத்தை வரன்முறை செய்யும் பணி நடந்தது. இதையடுத்து, தகுதியான 45 பேருக்கு பட்டா வழங்க, வருவாய்த்துறை முடிவு செய்துள்ளது.
இந்த இடத்தை எந்த திட்டத்திற்கும் பயன்படுத்தவில்லை என, மாநகராட்சி தடையின்மை சான்று வழங்கி உள்ளது.


