ADDED : மே 29, 2025 12:32 AM
தி.நகர், கோடம்பாக்கம் மண்டலம், 133வது வார்டு வெங்கட் நாராயணா சாலையில், மாநகராட்சி விளையாட்டு திடல் உள்ளது.
இங்கு கழிப்பறை வசதியில்லாததால், நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிக்காக வருவோர், இயற்கை உபாதை கழிக்க அவதிப்பட்டனர்.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் மைதானத்தில் கழிப்பறை கட்டப்பட்டது. இப்பணி முடிந்ததை அடுத்து, தி.நகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி நேற்று திறந்து வைத்தார்.