Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பொன்னி அம்மன் கோவில் சொத்து மூன்று மாதங்களில் மீட்க உத்தரவு

பொன்னி அம்மன் கோவில் சொத்து மூன்று மாதங்களில் மீட்க உத்தரவு

பொன்னி அம்மன் கோவில் சொத்து மூன்று மாதங்களில் மீட்க உத்தரவு

பொன்னி அம்மன் கோவில் சொத்து மூன்று மாதங்களில் மீட்க உத்தரவு

ADDED : ஜன 22, 2024 01:23 AM


Google News
சென்னை:சென்னை, புரசைவாக்கம் பாதாள பொன்னியம்மன் கோவில் இடத்தை மூன்று மாதங்களில் அறநிலையத் துறை வசம் எடுக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புரசைவாக்கத்தில், கங்காதரேஸ்வரர் கோவில் உள்ளது. இதனுடன் இணைந்தது, பாதாள பொன்னியம்மன் கோவில். நம்மாழ்வார்பேட்டை, பராக்கா சாலை முதல் தெருவில் உள்ள 750 சதுரஅடி இடம், கோவிலுக்கு சொந்தமானது.

அதிகாரிகள் ஆய்வு செய்த போது வாடகை கொடுக்காமல், உத்திரபதி என்பவர் வசம் இடம் இருந்தது தெரிய வந்தது.

இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:

சொத்தின் மீது கோவிலுக்கு உள்ள உரிமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாரணை நீதிமன்றம் சரியான முடிவுக்கு வந்துள்ளது. அதில் குறுக்கிட தேவையும் இல்லை.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் அனுபவத்தில் இருந்தது என்பதை உறுதி செய்ய, உத்திரபதி தரப்பில் எந்த ஆவணமும் தாக்கல் செய்யவில்லை.

குழந்தைக்கும், அதன் சொத்துக்கும் பாதுகாவலனாக, நீதிமன்றம் உள்ளது. அதேபோல், கடவுளின் சொத்துக்களுக்கும், நீதிமன்றம் தான்பாதுகாவலன்.

குழந்தையை பாதுகாப்பது போல், கடவுளின் சொத்துக்களையும், நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும்.

எனவே, மூன்று மாதங்களில் பாதாள பொன்னியம்மன் கோவில் இடத்தை, தங்கள் வசம் எடுக்க, நிர்வாக அதிகாரிக்கு உரிய உத்தரவுகளை, அறநிலையத் துறை ஆணையர் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us