நெல் கொள்முதல் தொடருது: வாணிப கழகம்
நெல் கொள்முதல் தொடருது: வாணிப கழகம்
நெல் கொள்முதல் தொடருது: வாணிப கழகம்
ADDED : செப் 25, 2025 02:49 AM
சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக, வாணிப கழக நிர்வாக இயக்குநர் ஜான் லுாயில் விடுத்த செய்திக்குறிப்பு:
நடப்பு நெல் கொள்முதல் சீசன் இம்மாதம், 1ம் தேதி முதல் துவங்கி, தொடர்ந்து நடக்கிறது. இந்த சீசனில் கடந்த 22ம் தேதி வரை, திருவள்ளூர் மாவட்டத்தில், 62 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 2,255 விவசாயிகளிடம் இருந்து, 17,501 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில், 75 கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, 3,620 விவசாயிகளிடம் இருந்து, 24,605 டன்; செங்கல்பட்டில், 59 கொள்முதல் நிலையங்களில், 2,019 விவசாயிகளிடம் இருந்து, 14,578 டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மூன்று மாவட்டங்களிலும் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சேமிப்பு கிடங்கு மற்றும் திறந்தவெளி சேமிப்பு நிலையங்களுக்கு அனுபப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் யாரும் கலக்கம் அடைய வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.