/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குழந்தை எலும்பியல் மருத்துவம் 'அப்பல்லோ'வில் புதிதாக துவக்கம் குழந்தை எலும்பியல் மருத்துவம் 'அப்பல்லோ'வில் புதிதாக துவக்கம்
குழந்தை எலும்பியல் மருத்துவம் 'அப்பல்லோ'வில் புதிதாக துவக்கம்
குழந்தை எலும்பியல் மருத்துவம் 'அப்பல்லோ'வில் புதிதாக துவக்கம்
குழந்தை எலும்பியல் மருத்துவம் 'அப்பல்லோ'வில் புதிதாக துவக்கம்
ADDED : ஜூன் 20, 2025 12:40 AM

சென்னை, அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில், எலும்பியல் மருத்துவம், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை சிறப்பு மையம் துவங்கப்பட்டு உள்ளது.
சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில், தமிழகத்தில் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளுக்கான சிறப்பு மையம் துவங்கப்பட்டு உள்ளது.
குழந்தைகளுக்கு விளையாட்டில் ஏற்படும் காயங்கள், பிறவி பாதிப்புகள் உள்ளிட்டவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் சென்னை மண்டல தலைமை செயல் அதிகாரி இளங்குமரன் கலியமூர்த்தி கூறியதாவது:
குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க, முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. அவர்களுக்கு ஏற்ற, அக்கறையுடன் கவனித்து கொள்ளும் முறை, 140 மருத்துவ சீரமைப்பு சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், நவீன மருத்துவ பராமரிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து சிகிச்சை மையங்கள் உள்ளன.
மேலும், குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில், பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதுடன், விளையாட்டு பொருட்கள் போன்ற அம்சங்களுடன் மருத்துவ அறைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
குழந்தை எலும்பியல் மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் சங்கர் உள்ளிட்ட அனுபவமிக்க மருத்துவ குழுவினர் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.