/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இரவில் தொடரும் மின் தடை அதிகாரியை முற்றுகையிட்ட மக்கள் இரவில் தொடரும் மின் தடை அதிகாரியை முற்றுகையிட்ட மக்கள்
இரவில் தொடரும் மின் தடை அதிகாரியை முற்றுகையிட்ட மக்கள்
இரவில் தொடரும் மின் தடை அதிகாரியை முற்றுகையிட்ட மக்கள்
இரவில் தொடரும் மின் தடை அதிகாரியை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : ஜூன் 21, 2025 12:14 AM
புழல், புழல் அடுத்த விநாயகபுரம், புதியலட்சுமிபுரம், கல்பாளையம், கங்கை அம்மன் கோவில் தெரு, கணேஷ் நகர், பழைய லட்சுமிபுரம், செகரட்டரியேட் காலனி சுற்று வட்டாரங்களில், கடந்த சில தினங்களாக நள்ளிரவு முதல் அதிகாலை வரை மின் தடை தொடர்கிறது.
இந்த நிலையில், நேற்று பக்ல 12:00 மணி அளவில், பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். அங்கிருந்த அதிகாரியிடம் புகார் செய்தபோது, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியாக புகார் மனுக்களை பெற்ற அதிகாரி, பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், சில மணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது:
கணேஷ் நகர் மற்றும் சுப்பிரமணிய நகரில் 500 வீடுகள் உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் இரவில் சரியாக துாங்க முடியாமலும், காலையில் தண்ணீர் இறைக்க மின் மோட்டார் போட முடியவில்லை. இதனால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் அலுவலகத்தில் இருப்பதே இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.