/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 15 வயது சிறுமியை கடித்த வளர்ப்பு நாய் 15 வயது சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்
15 வயது சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்
15 வயது சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்
15 வயது சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்
ADDED : ஜூன் 20, 2025 12:10 AM
சென்னை திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலையைச் சேர்ந்தவர் தர்மன், 42; சென்னை மாநகராட்சி, 129வது வார்டு சுகாதார பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிகிறார். இவரது 15 வயது மகள், வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு, கடந்த 13ம் தேதி நடந்து சென்றார்.
அப்போது, திருவல்லிக்கேணி வெங்கடசாமி தெருவில் வசிக்கும் லட்சுமி, 42, சிப்பிப்பாறை நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். திடீரென நாய், சிறுமி மீது பாய்ந்து வலது தொடை மற்றும் இடுப்பில் கடித்து குதறியது. அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சிறுமியை கடித்த நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது பெற்றோர் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில், நேற்று புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.