/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஜி.எச்., வளாகத்தில் மசூதி கட்டுமானத்தை அகற்ற மனு ஜி.எச்., வளாகத்தில் மசூதி கட்டுமானத்தை அகற்ற மனு
ஜி.எச்., வளாகத்தில் மசூதி கட்டுமானத்தை அகற்ற மனு
ஜி.எச்., வளாகத்தில் மசூதி கட்டுமானத்தை அகற்ற மனு
ஜி.எச்., வளாகத்தில் மசூதி கட்டுமானத்தை அகற்ற மனு
ADDED : செப் 25, 2025 12:40 AM

சென்னை :சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், அனுமதியின்றி கட்டப்பட்ட மசூதி கட்டுமானத்தை அகற்றக்கோரி, பாரத் ஹிந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளது.
சென்னை ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவ மனை வளாகத்தில், தர்கா மற்றும் மசூதி உள்ளன. இங்கு, தினமும், பலர் தொழுகைக்கு வந்து செல்கின்றனர்.
இதற்கிடையே, மசூதி யில் மழை பெய்தால் ஒழுகுவதாக கூறி, மசூதி நிர்வாகத்தினர், ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் சீரமைப்புக்கு அனுமதி கோரினர்.
அனுமதி பெறப்பட்டதும், சீரமைப்புக்கு பதிலாக, கூடுதல் தளங்கள் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து, மசூதி கட்டுமான பணியை ஆய்வு செய்த பொதுப்பணி துறை அதிகாரிகள், அப்பணியை நிறுத்த உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சென்னை மாவட்ட கலெக்டரிடம், பாரத் ஹிந்து முன்னணி மாநில செயலர் கே.டில்லிபாபு நேற்று மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறி யிருப்பதாவது:
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில், ஆக்சிஜன் பயன் பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி அருகே, 3,000 சதுர அடிக்கு மேலாக மசூதியின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இங்கு, தினசரி 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்வதுடன், ஒலிபெருக்கி வாயிலாக தொழுகை நடத்தி வருகின்றனர்.
சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட மசூதியில் தொழுகையை நடத்த வருபவர்கள், இருசக்கர வாகனத்தை மருத்துவமனை வளாகத்தில், நோயாளிகள், உறவினர்களுக்கு இடையூறாக நிறுத்தி செல்கின்றனர். அவற்றை தட்டிக்கேட்டால், மருத்துவமனை ஊழியர்களையும், பொதுமக்களையும் தாக்குகின்றனர்.
இது குறித்து கடந்தாண்டு புகார் அளித்த பின், எவ்வித கட்டுமான பணியும் நடைபெறாமல் இருந்தது. தற்போது மீண்டும் சட்ட விரோதமாகவும், எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டுமான பணி நடந்து வருகிறது.
இரண்டாவது தளம் நோக்கி கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், அக்கட்டுமானத்தை அகற்றி, மருத்துவமனை பயன் பாட்டுக்கு அவ்விடத்தை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.