/உள்ளூர் செய்திகள்/சென்னை/பள்ளி மாணவனுக்கு மிரட்டல் மர்மநபருக்கு போலீஸ் வலைபள்ளி மாணவனுக்கு மிரட்டல் மர்மநபருக்கு போலீஸ் வலை
பள்ளி மாணவனுக்கு மிரட்டல் மர்மநபருக்கு போலீஸ் வலை
பள்ளி மாணவனுக்கு மிரட்டல் மர்மநபருக்கு போலீஸ் வலை
பள்ளி மாணவனுக்கு மிரட்டல் மர்மநபருக்கு போலீஸ் வலை
ADDED : மார் 16, 2025 12:18 AM
திருவாலங்காடு,திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அருகே, அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு, ஆறு முதல் பிளஸ் 2 வரை 500க்கும் மேற்பட்ட மாணவ ---- மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில், நேற்று முன்தினம் மதியம் பள்ளி மாணவர்கள், 10க்கும் மேற்பட்டோர், வாலிபால் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது, பள்ளிக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், 10ம் வகுப்பு பயிலும் ரிஸ்வந்த், 15, என்பவரிடம், 'நான் விளையாடுவதையே கிண்டல் செய்கிறாயா? உன்னை கொன்று விடுவேன்' என, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து, பள்ளி ஆசிரியர்கள் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.


