Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ரீல்ஸ்' மோகத்தில் மாணவியர் போலீஸ் சப் - இன்ஸ்., கவலை

'ரீல்ஸ்' மோகத்தில் மாணவியர் போலீஸ் சப் - இன்ஸ்., கவலை

'ரீல்ஸ்' மோகத்தில் மாணவியர் போலீஸ் சப் - இன்ஸ்., கவலை

'ரீல்ஸ்' மோகத்தில் மாணவியர் போலீஸ் சப் - இன்ஸ்., கவலை

ADDED : அக் 08, 2025 02:38 AM


Google News
செம்மஞ்சேரி,

உலக மனநல தினத்தை முன்னிட்டு, தாம்பரம் க மிஷனரகத்தின் கீழ் செயல்படும் 'தளராத தளிர்கள்' அமைப்பு மற்றும் தனியார் கல்லுாரி உளவியல் படிக்கும் மாணவ - மாணவியர் இணைந்து, நேற்று செம்மஞ்சேரி அரசு பள்ளியில் மனநல விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இதில், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

அவர்களிடம் சப் - இன்ஸ்பெக்டர் சுஜாதேவி பேசியதாவது:

மாணவர்கள் ஒற்றுமையுடன் பழக வேண்டும். சக மாணவர்களை ஒதுக்கி வைப்பதோ, வேற்றுமை பார்ப்பதோ கூடாது. கேலி, கிண்டல் செய்யாதீர். நன்றாக படித்தாலும், சக மாணவர்களால் ஒதுக்கப்படுகிறோம் என தெரிந்தால், கவனச்சிதறல் ஏற்பட்டு, அந்த மாணவரின் வாழ்க்கை தவறான வழிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

சில மாணவியர், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' போடுவதில் நேரத்தை செலவிட்டு, வாழ்க்கையை பாழாக்குகின்றனர். எத்தனை பேர் விரும்புகின்றனர் என்பதை கண்காணித்து, படிப்பில் கோட்டைவிடுகின்றனர்.

தற்காலிக சந்தோசம், வாழ்க்கை முழுதையும் பாழாக்கிவிடும். ஆசிரியர்களும், மாணவர்களுக்கு நல்லொழுக்கம் போதிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

கவனச்சிதைவு, படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, தீய எண்ணங்கள் மேலோங்குவது, நட்புகள் புறக்கணிப்பு போன்ற மன உளைச்சல் ஏற்பட்டால், 'தளராத தளிர்கள்' அமைப்பு வழியாக இலவச ஆலோசனை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us