Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ துறைமுக தொழிலாளர்கள் 'போனஸ்' கோரி ஆர்ப்பாட்டம்

துறைமுக தொழிலாளர்கள் 'போனஸ்' கோரி ஆர்ப்பாட்டம்

துறைமுக தொழிலாளர்கள் 'போனஸ்' கோரி ஆர்ப்பாட்டம்

துறைமுக தொழிலாளர்கள் 'போனஸ்' கோரி ஆர்ப்பாட்டம்

ADDED : அக் 09, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
சென்னை, துறைமுக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி, சி.ஐ.டி.யு., சார்பில், சென்னை துறைமுகம் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து, இந்திய நீர் வழி போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலர் நரேந்திர ராவ் கூறியதாவது:

துறைமுக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க, 2024 அக்., 3ல், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தீபாவளிக்கு முன் போனஸ் வழங்கப்படும் என, கடந்த மாதம் 29ம் தேதி, துறைமுக நிர்வாகம் உறுதி அளித்தது.

ஆனால், இன்றுவரை போனஸ் வழங்கப்படவில்லை. போனஸ் வழங்காமல் முன்பணம் வழங்கி, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுமோ என, தொழிலாளர்களிடம் அச்சம் நிலவி வருகிறது.

முன்பணம் வழங்கினால், 2020 முதல் 2025 செப்டம்பர் வரை பணியாற்றிய பலர், இந்த முன்பணம் பெற தகுதியற்றவர்கள் ஆகிவிடுவர்.

எனவே, தீபாவளி போனசை, மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us