/உள்ளூர் செய்திகள்/சென்னை/ துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.52 லட்சம் பறிமுதல் துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.52 லட்சம் பறிமுதல்
துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.52 லட்சம் பறிமுதல்
துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.52 லட்சம் பறிமுதல்
துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.52 லட்சம் பறிமுதல்
ADDED : அக் 05, 2025 01:50 AM
சென்னை :சென்னையில் இருந்து நேற்று காலை துபாய் செல்லும் விமானத்தில் செல்ல இருந்த பயணியரின் உடைமைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, சுற்றுலா விசாவில் துபாய் செல்ல இருந்த ஆண் பயணியின் உடைமைகளில், 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.
அவரது பயணத்தை ரத்து செய்த பாதுகாப்பு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது, ஹவாலா பணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


