/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெருங்குடியில் பாலியல் தொழில் பெண் கைது; 2 பெண்கள் மீட்பு பெருங்குடியில் பாலியல் தொழில் பெண் கைது; 2 பெண்கள் மீட்பு
பெருங்குடியில் பாலியல் தொழில் பெண் கைது; 2 பெண்கள் மீட்பு
பெருங்குடியில் பாலியல் தொழில் பெண் கைது; 2 பெண்கள் மீட்பு
பெருங்குடியில் பாலியல் தொழில் பெண் கைது; 2 பெண்கள் மீட்பு
ADDED : ஜூன் 20, 2025 12:36 AM
பெருங்குடி,
பெருங்குடி பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக, விபசார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவல் வந்த பெருங்குடி, சர்ச் தெரு பகுதியில், போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அங்குள்ள ஒரு பழரசக் கடையில், சந்தேகத்திற்கு இடமான முறையில், சில நபர்களிடம் பெண்களை நிறுத்தி பேசிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை கண்காணித்தனர். பின், அந்த பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டதை உறுதி செய்தனர்.
அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரியம்மாள், 32, என்பதும், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
அவரிடமிருந்து, இளம்பெண் இருவர் மீட்கப்பட்டனர். பின், மாரியம்மாளை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பெண்கள், அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.