Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

ADDED : அக் 03, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
மது விற்ற

மூவர் கைது

வேளச்சேரி: வேளச்சேரி, திரவுபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், சட்டவிரோதமாக மது விற்பதாக, வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த வீட்டை சோதனை செய்தபோது, 62 மது பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்து கொண்டிருந்த தீனதயாளன், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஈஸ்வரியை தேடுகின்றனர். அதேபோல், கிண்டி, சைதாப்பேட்டையில் மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

போதை மாத்திரை

வைத்திருந்தவர் கைது

எம்.ஜி.ஆர்., நகர்: எம்.ஜி.ஆர்., நகர், அண்ணா பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில், சந்தேகத்திற்கிடமாக நின்றவரை போலீசார் விசாரித்தனர்.

அவரை சோதித்ததில், சட்டவிரோதமாக 150 வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சஞ்சய், 25 என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மாணவனிடம் பணம் பறித்த நால்வர் கைது

போரூர்: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுஜித், 22. கல்லுாரி மாணவர். இவருக்கு, நேற்று முன்தினம் பிறந்த நாள் என்பதால், சக மாணவர்களுடன், வானகரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினர்.

அப்போது, ஆன்லைன் தொழிலை தவறாக பயன்படுத்துவதாக சுஜித்தை மிரட்டிய சக மாணவர்கள், அவரிடமிருந்து, 17,000 ரூபாயை பறித்தனர். சுஜித் புகாரின்படி, சரவணகுமார், 23, சதீஷ், 19, உதயநிதி, 21, திலீப், 30, ஆகிய நால்வரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

வீட்டில் கஞ்சா

விற்ற இருவர் கைது

கண்ணகி நகர்: கண்ணகி நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்த போலீசார், அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த ஹரிகரன், 20, மணிக ண்டன், 19, ஆகிய இருவரை கைது செய்து, இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், தாம்பரம் ரயில் நிலையத்தில், மூன்று கிலோ கஞ்சாவுடன் வந்த ஒடிஷாவை சேர்ந்த சுபாஷ் பரிக், 25, என்பவரை, ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

மின்சாரம் பாய்ந்து

எலக்ட்ரீஷியன் பலி

நொளம்பூர்: நொளம்பூர், சித்தார்த் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன், 40; எலக்ட்ரீஷியன். உடல்நலக்குறைவால் இறந்த, வீட்டு உரிமையாளரின் தாயின் உடல் வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதனப் பெட்டிக்கு செல்லும் மின்சாரம், நேற்று அதிகாலை திடீரென தடைபட்டது.

இதையடுத்து, நாராயணன் குளிர்சாதன பெட்டிக்கு செல்லும் ஒயரை சரி செய்துள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.

அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் இறந்தது தெரிய வந்தது. நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us