ADDED : செப் 25, 2025 12:45 AM
சென்னை,ஆயுத பூஜைக்கு 3,225, சிறப்பு பஸ்களும், தீபாவளிக்கு 9,963 சிறப்பு பஸ்களும் இயக்க, அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளன.
ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக, நேற்று தலைமை செயலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது.
போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, நாளை முதல் வரும் 30ம் தேதி வரை, 3,225 சிறப்பு பஸ்கள் உட்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்., 16 முதல் 19ம் தேதி வரை, 5,710 சிறப்பு பஸ்கள் உட்பட 14,078 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல், சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் சென்னை வர வசதியாக, அக்., 21 முதல் 23ம் தேதி வரை, 4,253 சிறப்பு பஸ்கள் உட்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, அடுத்த மாதம் முதல் வாரத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.