/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை பள்ளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்சென்னை பள்ளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
சென்னை பள்ளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
சென்னை பள்ளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
சென்னை பள்ளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
ADDED : பிப் 02, 2024 12:02 AM

சென்னை, சென்னை மாநகராட்சி பள்ளிகள் இடையே, 2023 - -24ம் கல்வியாண்டுக்கான விளையாட்டு போட்டிகள், நேரு விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கின. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, மாணவ - மாணவியரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின், ஒலிம்பிக் சுடர் ஏற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 338 துவக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 81 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 1.20 லட்சம் பேர் படிக்கின்றனர். இவர்களில் நான்கு பிரிவுகளாக பிரித்து, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
அங்கிருந்து திரும்பி பார்க்கும்போது, இந்த பள்ளிகளில் படித்தோம் என்ற பெருமை, உங்களால் சென்னை பள்ளிகளுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


