/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில சீனியர் கூடைப்பந்து எழும்பூர் புள் அணி அபாரம் மாநில சீனியர் கூடைப்பந்து எழும்பூர் புள் அணி அபாரம்
மாநில சீனியர் கூடைப்பந்து எழும்பூர் புள் அணி அபாரம்
மாநில சீனியர் கூடைப்பந்து எழும்பூர் புள் அணி அபாரம்
மாநில சீனியர் கூடைப்பந்து எழும்பூர் புள் அணி அபாரம்
ADDED : செப் 26, 2025 02:25 AM
சென்னை :தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் சென்னை கூடைப்பந்து சங்கம் சார்பில், மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் மதியம் நடந்த மகளிர் பிரிவு போட்டியில், எழும்பூர் புள் அணி, நார்த் சென்னை பி.சி., அணியை எதிர்த்து மோதியது. விறுவிறுப்பான போட்டியில், எழும்பூர் புள் அணி, 52 - 20 என்ற புள்ளிகள் கணக்கில் எதிரணியை வீழ்த்தியது.
அடுத்த போட்டியில், சன்ஷைன் அணி 20 - 0 என்ற புள்ளிகளில், பெரம்பூர் அணியையும், எத்திராஜ் அணி 20 - 0 என்ற புள்ளிகளில், டி.வி.மலை பி.பி.ஏ., அணியையும் வீழ்த்தின.
அடுத்த போட்டியில், பிசியோகேர் அணி 47 - 35 என்ற புள்ளிகளில், விவேக் பி.பி.ஏ., அணியை வீழ்த்தியது.