/உள்ளூர் செய்திகள்/சென்னை/கன்னடப்பாளையத்தில் கடும் எதிர்ப்பு குப்பை கொட்ட மாநகராட்சி திணறல்கன்னடப்பாளையத்தில் கடும் எதிர்ப்பு குப்பை கொட்ட மாநகராட்சி திணறல்
கன்னடப்பாளையத்தில் கடும் எதிர்ப்பு குப்பை கொட்ட மாநகராட்சி திணறல்
கன்னடப்பாளையத்தில் கடும் எதிர்ப்பு குப்பை கொட்ட மாநகராட்சி திணறல்
கன்னடப்பாளையத்தில் கடும் எதிர்ப்பு குப்பை கொட்ட மாநகராட்சி திணறல்
ADDED : ஜன 28, 2024 12:21 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் இருந்து, தினமும் 250 டன்னுக்கும் அதிகமான குப்பை சேகரமாகிறது.
இதில், மண்டலம் 1 மற்றும் 2ல் சேகரமாகும் குப்பை பம்மல் விஸ்வேசபுரத்திலும், 3வது மண்டல குப்பை மாடம்பாக்கத்திலும், 4 மற்றும் 5வது மண்டல குப்பை மேற்கு தாம்பரம் கன்னடப்பாளையத்தில் கொட்டப்படுகிறது.
இதில், மேற்கு தாம்பரம், கன்னடப்பாளையத்தில் தேங்கியுள்ள குப்பை, ஆப்பூர் அருகேயுள்ள கொளத்துாரில் கொட்டி வந்தனர்.
இந்த நிலையில், ஆப்பூருக்கு குப்பை எடுத்து செல்வது திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், கன்னடப்பாளையத்தில் குப்பை மலைப்போல் தேங்கியது; அங்கு தொடர்ந்து குப்பை கொட்ட எதிர்ப்பு எழுந்து, வாகனங்கள் அப்பகுதி மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.
பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், குப்பை கொட்ட இடம் கிடைக்காமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இப்படியே போனால், தாம்பரம் மாநகராட்சியில் குப்பை பிரச்னை தீர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடும் என்பதில் மாற்றமில்லை.
ஆட்கள் பற்றாக்குறை
மண்டலம் 3ல் அன்றாட பணிகளான குடிநீர், கால்வாய் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை செய்ய போதிய ஆட்களும் இல்லை. நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் பலர், தனியார் நிறுவனத்தில் உள்ள பணிகளை செய்து வருகின்றனர்.இவர்களை மாற்றி, வார்டுகளில் உள்ள அடிப்படை பணிகளில் கவனம் செலுத்த, மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.