ADDED : செப் 13, 2025 12:57 AM
திருத்தணி: திருத்தணி அமிர்தாபுரத்தில் அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் ரவிசந்திரன், 14, சந்தோஷ், 14, ஆகிய இருவரும், வகுப்பறையில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இருவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் அரளி விதையை சாப்பிட்டது தெரியவந்தது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரளிக்காய் சுவை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காக சாப்பிட்டுள்ளது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது