டேபிள் டென்னிஸ் 160 பேர் பங்கேற்பு
டேபிள் டென்னிஸ் 160 பேர் பங்கேற்பு
டேபிள் டென்னிஸ் 160 பேர் பங்கேற்பு
ADDED : மார் 21, 2025 12:13 AM
சென்னை, சென்னை கமலநாபன் டேபிள் டென்னிஸ் கிளப் சார்பில், சென்னை கிளப்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி, மேற்கு சைதாப்பேட்டையில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், பல்வேறு கிளப்களை சேர்ந்த, 6 வயது முதல் 80 வயது வரை உள்ள 160 வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், சைதை கிளப்பை சேர்ந்த வசந்தியம், சி.டி.டி.எப்., கிளப்பைச் சேர்ந்த சங்கரும் பதக்கங்களை வென்றனர்.
பங்கேற்ற அனைவருக்கும், செப் தாமு, சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு பயிற்சியாளர் எத்திராஜன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர்.