/உள்ளூர் செய்திகள்/சென்னை/மழைநீர் கால்வாயில் கழிவுநீர் இருதரப்பிடம் பேச்சுமழைநீர் கால்வாயில் கழிவுநீர் இருதரப்பிடம் பேச்சு
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் இருதரப்பிடம் பேச்சு
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் இருதரப்பிடம் பேச்சு
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் இருதரப்பிடம் பேச்சு
ADDED : ஜன 28, 2024 12:10 AM
பெருங்களத்துார், பெருங்களத்துார் அடுத்த, நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலப்பாக்கத்தில் எஸ்.எஸ்.எம்., மற்றும் டி.வி.எஸ்., எமர்லாண்ட் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 5,000த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இக்குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் கால்வாய் வழியாக அருகேயுள்ள புத்துார் ஏரியில் கலக்கிறது. இதனால், ஏரியை ஒட்டியுள்ள குடியிருப்புவாசிகள், நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
பின், அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர் செல்லும் கால்வாயில் மண்ணை கொட்டி மூடினர்.
இந்நிலையில் நேற்று காலை, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், கால்வாயில் கொட்டப்பட்ட மண்ணை அகற்றினர். இதனால், அப்பகுதியில் பிரச்னை ஏற்பட்டு பரபரப்பாக மாறியது. தகவலறிந்து வந்த தாம்பரம் வருவாய் கோட்டாச்சியர் பரிமளா, அதிகாரிகள் மற்றும் போலீசார், இருதரப்பினரிடமும் பேச்சு நடத்தினர்.
இதில், அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீரை, மழைநீர் கால்வாயில் விடுவது சட்டப்படி குற்றமாகும். அதனால், அவர்களாகவே கழிவுநீர் பிரச்னையை சரிசெய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது.