/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தமிழக வீரர் - வீராங்கனையர் தடகளத்தில் 7 புதிய சாதனை தமிழக வீரர் - வீராங்கனையர் தடகளத்தில் 7 புதிய சாதனை
தமிழக வீரர் - வீராங்கனையர் தடகளத்தில் 7 புதிய சாதனை
தமிழக வீரர் - வீராங்கனையர் தடகளத்தில் 7 புதிய சாதனை
தமிழக வீரர் - வீராங்கனையர் தடகளத்தில் 7 புதிய சாதனை
ADDED : அக் 17, 2025 02:37 AM

சென்னை: தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக அணி, 7 புதிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளது.
ஒடிஷா மாநில தடகள சங்கம் மற்றும் இந்திய தடகள சங்கம் சார்பில், தேசிய அளவில் நடந்த 40வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஒடிஷா மாநிலத்தின் புவனேஸ்வரில் நடந்தது.
இதில், தமிழக அணி, 35 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதன் சாதனைப் பட்டியலில், தமிழக வீரர் - வீராங்கனையர், ஏழு புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.


