/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாணவர்கள் நலனுக்காக ரூ.18.85 கோடிக்கு கோவில் நிலத்தை மாநகராட்சி வாங்கியது மாணவர்கள் நலனுக்காக ரூ.18.85 கோடிக்கு கோவில் நிலத்தை மாநகராட்சி வாங்கியது
மாணவர்கள் நலனுக்காக ரூ.18.85 கோடிக்கு கோவில் நிலத்தை மாநகராட்சி வாங்கியது
மாணவர்கள் நலனுக்காக ரூ.18.85 கோடிக்கு கோவில் நிலத்தை மாநகராட்சி வாங்கியது
மாணவர்கள் நலனுக்காக ரூ.18.85 கோடிக்கு கோவில் நிலத்தை மாநகராட்சி வாங்கியது
ADDED : செப் 25, 2025 12:48 AM
சென்னை: மேற்கு மாம்பலத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்கள் நலனுக்காக, 18.85 கோடி ரூபாய் கொடுத்து, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை வாங்கி, அதை பத்திரப்பதிவு செய்தது தொடர்பான ஆவணங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, மேற்கு மாம்பலத்தில், மேட்டுப்பாளையம் பள்ளி சாலையில், பள்ளி கட்டடம் அமைப்பதற்காக, பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான, 24,000 சதுர அடி நிலத்தை வாங்க, தேவஸ்தானத்துடன் மாநகரா ட்சி ஒப்பந்தம் செய்தது.
வாடகை அடிப்படையில் நிலம் மாநகராட்சிக்கு தரப்பட்டது. இந்த பள்ளியில், தற்போது 2,500 மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், கடந்த 1969 முதல் வாடகை தரவில்லை என கூறி, பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது .
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இருதரப்பும் பேச்சு நடத்துமாறு, கடந்த 2023ல் உத்தரவிட்டது. ஆனால், அந்த பேச்சில் முடிவு எட்டப் படவில்லை.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாநகராட்சி அந்த நிலத்தை வாங்குமாறு அறிவுறுத்தியது.
இந்த வழக்கின் இறுதி விசாரணையில், 'பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 24,000 சதுர அடி இடத்தை, 18.85 கோடி ரூபாய் கொடுத்து, பள்ளி மாணவர்களின் கல்விக்காக, இரு தரப்பும் ஒப்புதல் அளித்தது. மேலும், சென்னை மாநகராட்சி, நிலத்தை வாங்கவும் முடிவு செய்துள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவில் நிலத்தை, தற்போதைய சந்தை மதிப்பின்படி, 18.85 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி, பத்திரப்பதிவு செய்ததாக தெரிவித்து, அதற்கான ஆவணங்களை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.