/உள்ளூர் செய்திகள்/சென்னை/மருத்துவமனைக்கு செல்லும் குழாய் உடைந்து குடிநீர் வீண்மருத்துவமனைக்கு செல்லும் குழாய் உடைந்து குடிநீர் வீண்
மருத்துவமனைக்கு செல்லும் குழாய் உடைந்து குடிநீர் வீண்
மருத்துவமனைக்கு செல்லும் குழாய் உடைந்து குடிநீர் வீண்
மருத்துவமனைக்கு செல்லும் குழாய் உடைந்து குடிநீர் வீண்
ADDED : பிப் 02, 2024 12:07 AM

கிண்டி, கிண்டி, ஆலந்துார் சாலையில், கலைஞர் நுாற்றாண்டு மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை தேவைக்காக, சாலை அடியில் குழாய் பதிக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்படுகிறது.
நேற்று, மின்கேபிள் பதிக்க, இச்சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இதில், பிரதான குழாய் சேதமடைந்ததால், குடிநீர் வீணாகி, சாலையில் ஆறாக ஓடியது.
இரண்டு மணி நேரம், சாலையில் ஓடிய குடிநீரால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின், குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, குடிநீர் வினியோகத்தை நிறுத்தி, குழாயை சீரமைத்தனர்.


