ADDED : செப் 24, 2025 03:43 AM

குன்றத்துார், :
சோமங்கலம்- --தாம்பரம் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்னர்.
தாம்பரம்--- சோமங்கலம் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் வரதராஜபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பில் வளர்க்கப்படும் மாடுகள் தினமும் சுற்றி திரிகின்றன.
இரவு நேரத்தில் மாடுகள் சாலையில் படுத்து உறங்குகின்றன. இதனால், அந்த வழியே பைக்கில் செல்வோர் வாகனங்கள் மீது மோதி அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.