/உள்ளூர் செய்திகள்/சென்னை/ லாரி டயர் வெடித்து பஞ்சர் கடை ஊழியர் பலி லாரி டயர் வெடித்து பஞ்சர் கடை ஊழியர் பலி
லாரி டயர் வெடித்து பஞ்சர் கடை ஊழியர் பலி
லாரி டயர் வெடித்து பஞ்சர் கடை ஊழியர் பலி
லாரி டயர் வெடித்து பஞ்சர் கடை ஊழியர் பலி
ADDED : அக் 01, 2025 02:32 PM
மணலி
பஞ்சர் கடையில், லாரி டயர் வெடித்ததில், கடை ஊழியர் பலியானார்.
திருவொற்றியூர், கணபதி நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல் ரியாஸ், 32; சாத்தாங்காடு, மணலி விரைவு சாலையில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில், பீஹார் மாநிலம், மதுபாணி பகுதியைச் சேர்ந்த ராஜகுமார், 22, என்பவர், நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
ராஜகுமார் நேற்று, கன்டெய்னர் லாரியின் பின்பக்க டயரில் பஞ்சர் முடித்து, அதை அதற்கான பாகத்தில் மாட்டும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, பயங்கர சத்தத்துடன் டயர் வெடித்ததில், முகத்தில் படுகாயமடைந்த ராஜகுமார், அங்கேயே உயிரிழந்தார்.


