/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.2.49 கோடி மோசடி ஓய்வு அரசு ஊழியரை ஏமாற்றிய இருவர் கைது ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.2.49 கோடி மோசடி ஓய்வு அரசு ஊழியரை ஏமாற்றிய இருவர் கைது
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.2.49 கோடி மோசடி ஓய்வு அரசு ஊழியரை ஏமாற்றிய இருவர் கைது
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.2.49 கோடி மோசடி ஓய்வு அரசு ஊழியரை ஏமாற்றிய இருவர் கைது
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.2.49 கோடி மோசடி ஓய்வு அரசு ஊழியரை ஏமாற்றிய இருவர் கைது
ADDED : செப் 26, 2025 12:56 AM

சென்னை, : சென்னை, பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த, விளையாட்டு துறையில் ஓய்வு பெற்ற 70 வயது பெண், 'ஆன்லைன்' முதலீட்டு விளம்பரத்தை பார்த்து, 2024, நவ., 20 முதல், 2025, ஜன., 18ம் தேதி வரை, 2.49 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, முதலீடு நிறுவனமான எச்.இ.எம்., செக்யூரிட்டீஸ் நிறுவனத்தினர், பல்வேறு காரணங்கள் கூறி, பணத்தை எடுக்கவிடாமல் தடுத்துள்ளனர்.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் தனிப்படை அமைத்தனர்.
விசாரணையில், மோசடி செய்த பணத்தை அனுப்ப, திருப்பூர் ஸ்ரீசாய் கிருஷ்ணா ஹோட்டலுக்குச் சொந்தமான கரூர் வைஷ்யா வங்கி கணக்கை பயன்படுத்தியது தெரியவந்தது.
மேலும், முக்கிய குற்றவாளிக்கு, அக்கணக்கிலிருந்து தொகையை அனுப்பி, திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ், 32, துாத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார், 32, ஆகிய இருவரும், கமிஷன் தொகையை வாங்கியதும் தெரியவந்தது.
இருவரையும், 23ல், துாத்துக்குடியில் வைத்து, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டோரிடம் இருந்து, மூன்று மொபைல் போன்களும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இருவரும், இதேபோல் பல வங்கி கணக்குகளை துவங்கி, மோசடி கும்பல்களுக்கு பரிவர்த்தனை செய்து கமிஷன் தொகை பெற்று வந்ததும் தெரியவந்தது.
மேலும், பண பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கி கணக்குகள் அனைத்தும், பல்வேறு மாநிலங்களில், சைபர் கிரைம் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை பிடிக்கும் பணியில், சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.