/உள்ளூர் செய்திகள்/சென்னை/ செய்திகள் சில வரிகளில் வழக்கறிஞரை மிரட்டியதாக இருவர் கைது செய்திகள் சில வரிகளில் வழக்கறிஞரை மிரட்டியதாக இருவர் கைது
செய்திகள் சில வரிகளில் வழக்கறிஞரை மிரட்டியதாக இருவர் கைது
செய்திகள் சில வரிகளில் வழக்கறிஞரை மிரட்டியதாக இருவர் கைது
செய்திகள் சில வரிகளில் வழக்கறிஞரை மிரட்டியதாக இருவர் கைது
ADDED : செப் 24, 2025 03:26 AM
ஆலந்துார்: நங்கநல்லுாரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 32; வழக்கறிஞர். கடந்த 20ந் தேதி, ஆலந்துார் நீதிமன்றத்துக்கு சென்ற போது, இவரிடம் ஒரு பெண்ணும், ஒரு நபரும் வாக்குவாதம் செய்து மிரட்டினர்.
பரங்கிமலை போலீசாரின் விசாரணையில், ரவிச்சந்திரனை மிரட்டிய, மடிப்பாக்கம், ராம் நகரை சேர்ந்த வைஷ்ணவி, 25, மற்றும் அவரது உறவினர் மனோஜ், 38, என்பது தெரிந்தது.
அவர்களை பிடித்து விசாரித்ததில், ஆறு மாதங்களுக்கு முன் காதல் விவகாரம் தொடர்பாக, வைஷ்ணவிக்கு எதிராக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்ததற்காக, ரவிச்சந்திரனை மிரட்டியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.